மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தது உயர் நீதிமன்றிம்! கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை!
ராஜகிரியவிலுள்ள ஆடம்பர றோயல் பார்க் தொடர்மா டியில் 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவாளிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன் றம் இன்று உறுதிசெய்தது.
நீதியரசர்கள் சலீம் மர்சூக், கே.ஸ்ரீபவன், சந்தியா ஹெட்டிகே ஆகியோர் கொண்ட குழாமே இந்த தீர்ப்பை இன்று இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
2005 ஜூலை மாதம் இவோன் ஜோன்ஸ்டன் என்ற 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவாளி ஜூட் சமால் என்டனி ஜயமகவிற்கு மேல் நீதிமன்றம் 12 வருட கால சிறை தண்டனை எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்திருந்தார். மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதன்பின் குற்றவாளி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். அதன்படி குறித்த வழக்கு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்றம் இன்று உறுதிசெய்தது.
0 comments :
Post a Comment