இங்கிலாந்து நாட்டை தாக்க தயாராகும் உக்கிர புயல்!(காணொளி)
மோசமான பவுர்புல் புயல் இங்கிலாந்து நாட்டை நாளை காலை (திங்கட்கிழமை) 160 கி.மீட்டர் வேகத்தில் கடும்புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது போன்ற புயல் தாக்குதல் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ளது என்றும் 26 ஆண்டுகளுக்கு பின் அதேபோல் புயல் பாதிப்பு இருக்கும் என எச்சரித்துள்ளது அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்.
இதனால் காலை 6 மணியிலிருந்து 9 மணிக்குள் 40 மி.மீ மழை பெய்யக்கூடும் என்றும், 80 கி .மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் மரங்கள் முறிந்து கட்டடங்கள் சேதமடையலாம் என்றும் வானிலை ஆய்வுமைய செய்தி தொடர்பாளர் நிக்கலா மேக்ஷி தெரிவித்துள்ளார்.
மணிக்கு 100 மைல் (160 கி.மீட்டர்) வேகத்தில் தாக்கும் இந்த புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புயல் சீற்றத்தின் பாதிப்பாக 30 முதல் 40 செண்டி மீட்டர் மழையும் பெய்யக்கூடும் என்றும் இதன் விளைவாக பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
0 comments :
Post a Comment