புனிதமான கல்வித்துறையில் காடையர்கள்! கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கைது!
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட கல்முனை வலயக் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதி கல்வி பணிப்பாளர் பதில் அதிபரின் அனுமதியின்றி வகுப்புக்களுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது 10ஆம் ஆண்டிலுள்ள வகுப்பறைக்கு சென்று பாடத்திட்ட புத்தகத்தில் கீறல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இந்த செயற்பாடு குறித்து ஆசிரியர்கள் குறித்த பிரதி கல்வி பணிப்பாளரிடம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன் காரணமாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இன்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன் பிரதி கல்விப் பணிப்பாளர் தங்கியிருந்த அதிபர் காரியாலயம் மாணவர்களினால் முற்றுகையிடப்பட்டது இதனையடுத்து வலய கல்வி பணிப்பாளர் மற்றும் கல்முனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
எனினும் குறித்த பிரதிப் கல்விப் பணிப்பாளரை கைது செய்யுமாறு மாவணர்கள் வலியுறுத்தினர். இதனால் நிலைமையினை கட்பாட்டுக்கொண்டு வருவதற்காக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கைது செய்யப்பட்டு பாடசாலை யிலிருந்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பிரதி அதிபர் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment