ஈழத்தமிழரின் நலன்கருதி பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வாசன் தீர்மானம்!
இந்திய மத்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பயணத்தின் போது, அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பு, உரிமை வளர்ச்சி திட்டங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் பேச்சு நடத்தியுள்ளார் என்றும்,
தமிழக மீனவர் பிரச்சனைக்கு வரும் மாதங்களில் தீர்வு ஏற்படும் நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி தமிழக மக்களின் எண்ணம் மற்றும் இலங்கையில் வாழ் தமிழர் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றும் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment