பந்து என நினைத்து குண்டோடு விளையாடிய சிறுனுக்கு வந்த விபரீதம்!
கைக்குண்டு என நம்பப்படும் வெடிபொருளை எடுத்து விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் அக்கைக் குண்டு வெடித்ததால் மட்டகளப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டகள ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருப்பெருந்துரை, அன்னை வேளாங்கணி தேவாலய வளவினுள் குளித்து கொண்டிருந்த வீரசிங்கம் மதுசாந்தன் எனும் 5ம் ஆண்டில் கல்வி பயிலும் 11 வயதுடைய மாணவன், குறித்த வெடிபொருளை பொறுக்கி மற்றொரு கல்லின் மேல் அடித்த போது அது வெடித்தது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment