பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிறந்த களம் பாராளுமன்ற தெரிவுக்குழு! மஹிந்த - சல்மானிடம் தெரிவிப்பு
பாராளுமன்ற தெரிவுக்குழுவே, தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறந்த களமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட்டிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல் மான் குர்ஷிட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தார். இந்திய - இலங்கை உறவு களை மேலும் கட்டியெழுப்புவதற்கு, நெருங்கி செயற்படுவதற் கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இப்பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
அண்மையில் நடைபெற்ற வட மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தேர்தலை நடாத்துவதற்கு, ஜனாதிபதி மேற்கொண்ட துணிச்சல்மிக்க தீர்மானத்திற்கு தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். மாகாண சபை தேர்தல் நடைபெற்றமை, வரலாற்று பதிவெனவும், இதன்மூலம் மேலும் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றும், அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
13வது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு, சிறந்த களம், பாராளுமன்ற தெரிவுக்குழுவே என கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டி, மக்கள் தேவைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை இனங்காண வேண்டுமெனவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பலரும், இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment