Saturday, October 19, 2013

மட்டுக்கு விஜயம் செய்த மேர்வின்! கருணாவுடன் இணைந்து பாலத்தினை பார்வையிட்டார்! (படங்கள்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் - எழுவான்கரை யையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் நிர்மாண பணிகளை மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேரில் சென்று பார்வையி ட்டார்.

இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்(கருணா) மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இப்பாலம் பாலம் 2014 மே மாதமளவில் இந்தப் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment