Sunday, October 6, 2013

கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை குறைக்க கூடாது என்ற பிரேரணையை ஜனா பகிஷ்கரித்ததேன்?

நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபையில் ஆழும் கட்சியை சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பிரேரணையை கொண்டுவந்தது. அந்த பிரேரணையில் கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படக்கூடாது எனக் கோரப்பட்டது. ஏலவே திட்டமிட்டிருந்தபடி எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரங்களை குறைக்க கூடாது என்ற இந்த பிரேரணை பெரும்பாண்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் குறித்த பிரேரணை முஸ்லிம் காங்கிரஸால் கொண்டுவரப்படுவதையும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்குவது என்பதை திட்டமிட்டிருந்தபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு சபைக்கு தெரிவாகியுள்ள ரெலோ அமைப்பின் ஜனா எனப்படுகின்ற கோவிந்தன் கருணாகரன் குறித்த அமர்விற்கு சமூகமளிக்கவில்லை

இவர் அரசாங்கத்தின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுகின்றாரா என்ற கேள்வியை எழுப்பும் மக்கள் ஜனா பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிறேமதாச அரசின் அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்து சன்மானமாக ஒரு சொகுசு காரையும் 10 லட்சம் ரூபா ரொக்கப்பணத்தையும் பெற்றுக்கொண்ட வரலாற்று துரோகத்தை நினைவுகூருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com