கிழக்கின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது. கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு துறை அமைச்சு மட்டக்களப்பு வெபர் மைதான த்தை அபிவிருத்தி செய்து வருகின்றது.
107 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் இவ்விளை யாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்தவுடன் கிழக்கின் விளையாட்டு வீரர்கள் கூடிய பயனை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் புனரமைப்பு பணிகளை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார். பிரதி அமைச்சர் முரளிதரன் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கம கேயிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இம் மைதானம் புனரமைக்கப் படுகின்றது. நீச்சல் தடாகம், உதைபந்தாட்ட திடல், கிரிக்கட், வலைபந்தாட்ட திடல், பார்வையாளர் அரங்கு, உள்ளக அரங்கு உட்பட பல நவீன வசதிகளை உள்ளடக்கியதாக மைதானம் புனரமைக்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் 25 அம் திகதி அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்படுமென மாவட்ட செயலகம் தெரிவித்தது.
No comments:
Post a Comment