தனிநபர்களின் கடன் தகவல்களை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்!
தனிநபர்கள் கடன் தொடர்பான தகவல்களை இணையத் தளத்தினூடாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்று முதல் கிடைக்கப்பெறவுள்ளது. கடன் தொடர்பான தகவல் களை பெற்றுக்கொள்ளும் காரியாலயத்திற்கு வந்து பதிவுசெய்ததன் பின்னர் இணையத்தளத்தினூடாக குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
இணையத்தளத்தினூடாக குறித்த சேவையை தெற்காசி யாவில் வழங்கும் முதல் நாடு இலங்கையென்ற பெருமையும் அதனூடாக கிடைக்கப்பெறுகிறது. வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் செல்லாமல் மக்களுக்கு துரிதமாக சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை கடன் தகவல் தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment