கதவில்லாமல் பயணம் செய்த விமானம்! அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் கதவு கழன்று வீழ்ந்த சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியு ள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் மென்ரி விமான நிலை யத்திலிருந்து பயணித்த சிறியரக விமானமொன்றின் கதவே, இவ்வாறு கழன்று வீழ்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் வேகமாக பறந்துகொண்டிருந்த போது, திடீரென பாரிய சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, விமானத்தின் நிலையை அவதானித்த விமானி, கதவு கழன்று வீழ்ந்துள்ளதைக் கண்டு பதற்றமடைந்துள்ளார். உடனடியாக சமயோசிதமாக செயற்பட்ட விமானி, விமானத்தை தாழ்வாக பறக்கச்செய்துள்ளார்.
3 தடவைகள் வட்டமிட்டவாறு கதவை தேடிப்பார்த்தும் அது கிடைக்கவில்லை. அதனால் விமானத்தை அவசரமாக விமானி தரையிறக்கியுள்ளார். இந்நிலையில் விமானத்திலிருந்து கழன்று வீழ்ந்த கதவு, ஹோட்டல் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. குறித்த ஹொட்டலின் உரிமையாளர் கதவு வீழ்ந்தமை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்தின்போது அதிஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
0 comments :
Post a Comment