தமிழரசுக் கட்சியினுள் உட்கட்சி மோதல் உச்சக்கட்டம்! நான்கு கட்சிகளும் நாளை அவசரமாகக் கூடுகின்றது.
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழரசுக் கட்சிக்கு மிடையேயான அதிகார மற்றம் பதவிப்பங்கீட்டு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாகாண சபைக்கான அமைச்சுப்பதவிகளை பங்கிடும் விவாகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் தன்னிச்யாக செயற்பட்டுள்ளதாக பங்காளிக்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்நிலையில் ஈபிஆர்எல்எப், ரெலோ , புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன நாளை அவசரமாகக் கூடுகின்றது.
ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று கொழும்பில் தங்கியுள்ளதாகவும் அவர் திரும்பியவுடன் நாளை இச்சந்திப்பு யாழ்பாணம் அல்லது வவுனியாவில் இடம்பெறும் என்று உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மூன்றும் கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்சிகளின் தூரநோக்கானது எதிர்வரும் தேர்தல்களே என்பதால் முடிவுகள் விபரீதமானதாக அமையாது என்பதை இலங்கைநெட் கட்டியம் கூறிவைக்க விரும்புகின்றது.
வேட்பாளர் தெரிவில் தொட்டு அமைச்சுப்பதவிகள் வரை உள்ளே மோதிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக ஒன்றாக மேடை ஏறுகின்றனரே தவிர உள்ளே எந்தவிதமான புரிந்துணர்வும் கிடையாது என்பதை தொடர் நிகழ்வுகள் இடித்துரைக்கின்றது.
தமது உள்வீட்டு பிரச்சினைகளுக்காக நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் இக்கும்பலால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக நேரத்தை ஒதுக்க முடியுமா அல்லது ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரமுடிமா ?
0 comments :
Post a Comment