குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை! யாழில் சம்பவம்!
யாழ். ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஒரு குழந்தையின் தந்தையான தங்கராசா சரத்பாபு (வயது 29) என்பவரே நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.
இவர் மதுபோதையில் மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாகவும், மனைவி யின் தரப்பினர்களினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment