Friday, October 18, 2013

சிறிதரனின் நாவற்குழி படம் தோல்வி! கிளிநொச்சியில் புதிய படப்பிடிப்பு நடைபெறுகின்றது.

இலங்கையின் அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2014 ம் ஆண்டு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஏகப்பட்ட வாக்குறுதிகளை வழங்கி கதிரையை பிடித்துக்கொண்ட சிறிதரன் அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் அடுத்த தேர்தலுக்கு தயாராகின்றார்.

அடுத்த தேர்தலை நோக்காக கொண்டு செயலில் இறங்கியுள்ள சிறிதரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவற்குழிப் பிரதேசத்திற்கு சென்று அங்கு பாரிய சிங்களக்குடியேற்றம் இடம்பெறுவதாக புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். புலம்பெயர் புலிப்பினாமிகளின் பிரச்சாராத்திற்கு ஏதுவாக புதிய புதிய படப்படிப்புக்களை செய்து அவற்றை ஊடகங்களுக்கு வழங்கி அதற்குரிய கூலியை புலம்பெயர் புலிகளிடம் பெற்றுக்கொள்வது சிறிதரனின் வழக்கமாக உள்ளது.

அனால் நாவற்குழி படப்பிடிப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது. நாவற்குழி விடயத்தில் சிறிதரன் கூறியவை யாவும் உண்மைக்கு புறம்பானது என சம்பந்தப்பட்ட யாழ் தமிழ் அரச அதிகாரிகளே கூறுகின்றனர். அதை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் கேட்கலாம்.



Video streaming by Ustream

நாவற்குழி படம் தோல்வி என்பதை உணர்ந்த சிறிதரன் தற்போது கிளிநொச்சியில் புதிய படப்பிடிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அந்தப்படப்பிடிப்பு இன்று நண்பகல் கிளிநொச்சியில் அமைந்திருந்த புலிகளின் மாயானம் (அவர்களின் பாஷையில் மாவீரர் இல்லம்) ஒன்றில் ஆரம்பித்துள்ளது. குறித்த படத்தின் கதையை „புலிகளின் மாவீரர் துயிலும் இல்லத்தினை சிறிதரன் எம்பி துப்புரவு செய்ய முற்பட்டபோது இலங்கை இராணுவம் தடுத்து விட்டது' என்று முடிப்பது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சிறிதரனுடன் வேலையில் இறங்கியுள்ள நகுலனுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

என்னை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கின்றேன் என்று தான் சிறிதரன் மக்களின் வாக்குகளை அபகரித்திருந்தார். ஆனால் அவர் இதுவரை காலமும் அரசின் உயர் சலுகைகளை அனுபவித்தாரே தவிர மேற்படி வேலைக்கான எந்த முயற்சியையும் செய்திருக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் நெருங்குகின்ற நிலையில் மக்ளை ஏமாற்ற புதியதோர் வியூகத்தை வகுத்துள்ளார். இதற்கான படங்கள் சற்று நிமிடங்களில் சிறிதரனின் சகோதரனின் இணையங்களில் பதிவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 comments:

  1. அன்றைய தமிழீழ புலிகளின் சேவகனாக, கூலியாக திரிந்து மக்களை ஏமாற்றி கொலை, கொள்ளை, களவு போன்ற கிரிமினல் வேலைகளை செய்து தங்களின் வயிற்றை வளர்த்த வந்த ஆசாமிகளுக்கு இப்படியான பதவிகள் கிடைத்ததே ஒரு பெரிய வரப்பிரசாரம்.

    அதை உணர்ந்து இன்றுவரை திருந்துவதாக இல்லை.

    அதற்கு மாறாக, மீண்டும் தங்கள் மாய விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி தங்களின் சுயநல சொகுசு வாழ்க்கைக்கு திட்டம் போடுறாங்கள்.

    தமிழ் மக்களே, இதுகளை தேர்ந்தெடுத்தது எங்களின் பெரும் தவறு என்பது உண்மை..
    இதுகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. We need to send the selected bestones to the parliament as our representatives not the rotten.Favourism,nepotism,sympathy votes cannot bring any prosperity to the region.This is the foolish thing
    what we were doing from the past.

    ReplyDelete
  3. We look for a caring and humane society.We are intended to humanize our living system.It is humanly possible to live together peacefully.

    ReplyDelete