நவிபிள்ளையின் பெற்றோர் இலங்கை வந்திருந்தால் நவிபிள்ளையும் கொழுந்து பறித்திருப்பார் - மனோ
இந்திய வம்சாவளி தமிழர்களான நவநீதன் பிள்ளையின் முன்னோர் தென்னிந்தியாவில் இருந்து நல்லவேளையாக தென்னாபிரிக்காவுக்கு போனார்கள். இங்கு கண்டி சீமைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்களை போல் அவர்களும், தப்பி தவறி அன்று இலங்கை வந்திருந்தால் அவர்களுக்கு பிறந்த நவநீதன் பிள்ளையும், இன்று இங்கு மலைநாட்டில் வாழும் பெரும்பாலான இந்திய வம்சாவளி தமிழ் பெண் களைப்போல் கொழுந்து கூடையை சுமந்து கேள்வி குறியைபோல் முதுகு வளைந்து, உழைத்து உருக்குலைந்து போயிருப்பார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பெண்கள் அணியான ஜனநாயக மகளிர் இணை யத்தின் அமைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் இணையத்தின் செயலாளர் நந்தினி செல்வரத்தினம் தலைமையில் இன்று பாமன்கடை பணிமனையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்
0 comments :
Post a Comment