நல்லாட்சிக்கான இயக்கம் பா.உ. ஹிஸ்புள்ளாஹ்வுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்
கத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொருளாதாரப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ்வுக்கு, தங்களுடனான கலந்துரையாடல் எனும் தலைப்பிட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரதி ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நெற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் பீரீஎப் வடிவத்தில் இருக்கிறது. வாசகர்களின் நலன்கருதி நாம் அதனை மீள் தட்டச்சிட்டு இங்கு இணைத்துள்ளோம். அசல் பிரதி கீழ் இணைக்கப்பட்டுள்ளது. (இலங்கைநெற்)
அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் பா.உ
பொருளாதாரஅபிவிருத்தி பிரதியமைச்சர்
பிரதியமைச்சர் காரியாலயம்
காத்தான்குடி.
அன்புடன்,
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களுடனான கலந்துரையாடல்
================================
தங்களுடனான பகிரங்க கலந்துரையாடலுக்கு எமது இயக்கத்தின் சூறா சபை தயாராக இருப்பதாகத் தெரிவித்து நாம் கடந்த 24.05.2013 அன்று தங்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்கான பதிலினை, கடந்த 26.05.2013 அன்று நீங்கள் எமக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். தங்களின் அக்கடிதத்திற்கான உத்தியோகபூர்வ பதிலாக நாம் இதனை எழுதுகின்றோம். உண்மையில் எமது பதிலனை உடனடியாகவே தங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என எமது சூறா சபை தீர்மானித்திருந்த போதிலும் தொடர்ந்தேச்சியாக வந்த பல்வேறு முக்கிய விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருநத் தன் காரணமாக இந்த பதிலானது தாமதமானது என்பதையும் தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நீங்கள் அனுப்பிய கடிதத்தில், கலாசார மண்டபத்தில் நீஙகள் 17.05.2013 அன்று ஆற்றிய பகிரங்க உரையை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகத்திறக்டையில் சகோதர உணர்வும், ஒற்றுமையும் இன்றைய நிலையில் கட்டாயத் தேவையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள். மேலும் தேர்தல் காலங்களில் நாட்டின் சட்டப்படி வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து போட்டியிட்டாலும் கூட தேர்தலின் பின்னர் சுய இலாபங்களுக்கு அப்பால் சகோதர உணர்வுடன் இவ்வூரினதும், எதிர்கால சந்ததியினதும் உயர்ச்சிக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும், இதனையே அல்குர்ஆனும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.
மேலும், பொது நன்மைக்காக ஒன்றுபட்டுச் செயற்படுகின்ற அரசியல் கலாசாரத்தையே நீங்கள் விரும்புவதாகவும், பகிரங்கமான கலந்துரையாடல் எனும் பெயரில ; அமையும் வாதப்பிரதிவாதங்கள் ஆக்கபூர்வமான எந்தவொரு விளைவையும் தரப்போவதில்லை எனவும் உங்கள் கடிதத்தில் தெரிவித்திருந்ததோடு, நம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும், நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர் கொள்வதற்காகவும் எம்முடன் கலந்துரையாடி நல்ல திட்டங்களை உருவாக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் உங்களின் அழைப்பை தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் நாம் பகிரங்கக் கலந்துரையாடல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என்பதனை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த 17.05.2013 அன்று நீங்கள் ஆற்றிய உரையானது, பகிரங்கக் கூட்டம் ஒன்றின்போதே நிகழ்த்தப்பட்டது. மட்டுமல்லாமல் அவ்வுரை ஒலி பெருக்கியிலும், இணையத்தள மூலமாகவும் ஒலி ஒளிபரப்பப்பட்டதுடன் மட்டுமின்றி, தங்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சட்ட விரோத திருட்டு வானொலியிலும் நமது பிரதேசம் முழுக்க ஒலிபரப்பும் செய்யப்பட்டது. இதனை காத்தான்குடி மக்கள் மாத்திரமின்றி இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் வாழுகின்ற ஏராளமான முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் நிச்சயம் செவியேற்றிருப்பார்கள். 'அபிவிருத்தியும் சமகால அரசியல் நிலவரங்களும், எனும் தலைப்பில் உரையாற்றத் தொடங்கிய நீங்கள், உங்கள் உரையின் கணிசமான நேரத்தை எமது இயக்கத்தின் மீது அவதூறான பொய்யான குற்றசச் சாட்டுக்களை முன் வைப்பதிலேயே செலவழித்தீர்கள். இவ்வூரின் அபிவிருத்திக்கு நாம் எப்போதும் தடையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.
மேலும், ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி தொடர்பான விடயங்களிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்களையே பகிரங்கமாகக் கூறினீர்கள். இவற்றையெல்லாம் கூறிய பின்னர்தான் எம்மோடு கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினீர்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்களையும், அபாண்டங்களையும் பகிரங்கமாகவே தெரிவித்து விட்டு, அவற்றுக்கான தீர்வுகளை இரகசியமான முறையில் கலந்துரையாடிக் கண்டு பிடிக்க முடியாது என்பது மிக எளிமையான யதார்த்தமாகும். நீங்கள் பகிரங்கமாகத் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கும், பொய்யான தகவல்களுக்கும் பகிரங்க மேடையமைத்து தனியாக எம்மால் விளக்கங்களைக் கூற முடியும். எனினும் நாம் மக்கள் முன் வைக்கும் விடயங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதும் என்பதனால் அதனை மக்கள் முன்னிலையில் உங்களோடு கலந்துரையாடுவதன் மூலமே மக்களும் தெளிவு பெறுவார்கள் என்ற நியாயமான காரணத்தினாலேயே நாம் பகிரங்கமான கலந்துரையாடல் ஒன்றைக் கோரியிருந்தோம்.
அவ்வாறு செய்வதானது வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாயக வழிமுறையும்கூட. மேலும், நாம் நமது மக்கள் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பற்றிய விடயங்களையே கலந்துரையாட விரும்புகின்றோம் என்பதனால், எங்களுக்கும் உங்களுக்குமாக வாக்களித்த மக்கள் அனைவரும் நாம் என்ன பேசுகிறோம் என்பதனைத் தெரிந்து கொள்ளும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். எனவே, நமக்கிடையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் பகிரங்கமான ஒன்றாக அமையப் பெறவேண்டியதற்கான அவசியத்தை உங்களது இவ்வாறான நடவடிக்கைகள்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும் ஜனநாயக மற்றும் இஸ்லாமிய வழிமுறையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றனவே தவிர தடுக்கப்பட்டவையல்ல என்பதனையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
மேலும் எமது கடிதத்தில் குறிப்பிட்ட கலந்துரையாடல் / பேச்சுவார்த்தை என்ற பதத்தினை நீங்கள் தாறுமாறான விமர்சனம் எனப் பொருள் கொண்டு இறுதியில் அது பிரயோசனமற்ற விவாதமாகவே அமையும் என முடிவு செய்திருப்பது மிகவும் தவறானதாகும். நாகரீகமான, அறிவு பூர்வமான, பரஸ்பர சகோதரத்துவ உணர்வு கொண்ட, நீதியும் தர்மமும் வழுவாத பல்வேறு கருத்துப் பரிமாறல்களை ஜனநாயக அரசியல் களத்திலும், இஸ்லாமிய தஃவா களத்திலும் நிதர்சனமாக நாம் காண்கிறோம். அவ்வாறு அறிவு பூர்வமாகவும், பண்பாட்டுடனும், அடுத்தவரையும் அவரது கருத்துக்களையும் மதித்தும் கருத்தாடல் செய்கின்ற பக்குவமும் பண்பாடும் நிதானமும் எமககு; இருக்கிறது என நாம் உறுதியாக நம்புகின்றோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் அவ்வாறானதொரு பகிரங்கக் கலந்துரையாடலை விரும்பினோம்.
மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நீங்களும், நாங்களும் அதே மக்களின் முன்பாகக் கலந்துரையாடுவதற்குத் தயக்கம் கொள்ளத்தேவையில்லை என்பது எமது உறுதியான கருத்தாகும். அவ்வாறானதொரு பண்பாடுமிக்க, அறிவு பூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் பங்கேற்கக் கூடிய நிலையில் நீங்கள் இல்லையெனக் கருதினால் நாங்கள் அதனைத் தொடர்ந்தும் வற்புறுத்திக் கொண்டிருக்கவும் விரும்பவில்லை. மேலும், விவாதிப்பது இஸ்லாமிய வழிமுறையல்ல எனத் தெரிவித்துள்ள நீங்கள், உங்களது வசதிக்கு ஏற்றாற்போல இஸ்லாத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் முயறச் pத்துள்ளீர்கள். இது தொடர்பில் பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஒன்றையும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளபப் ட்ட ஹதீஸ் ஒன்றையும் உங்களின் கவனத்திற்குச் சுட்டிக்காட்டவும் விரும்புகின்றோம்.
'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்க்களிடத்த்தில் மிக அழகான முறையில் தர்க்க்கிப்ப்பீரீரீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்' 16:125. நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான். ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான். விவாதம் புரிந்த்தால் நேர்மை தவறிப் பேசுவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். மேலுள்ள அல்குர்ஆன் வசனமானது, ஒரு கருத்தினை அல்லது கொள்கையினை முன்வைக்கும் பொருட்டு விவாதம் செய்யப்படுகின்ற நிலை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மிகவும் நாகரீகமாக அதனைஅமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றது.
அதே போன்று மேலுள்ள ஹதீஸ் விவாதம் புரிகின்ற வேளையில் நீதியும், தர்மமும் தவறாது நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. ஆக, விவாதம் செய்கின்ற நடைமுறையினை இஸ்லாம் வெறுக்கவுமில்லை, தடுக்கவுமில்லை. மாறாக நிதானமாகவும், நாகரீகமாகவும், தர்மம் தவறாமலும் நடந்து கொள்ளும்படியே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. மேலும், சமூகத்தின் ஒற்றுமை பற்றியும் நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். 'அனைவரும் சகோதரர்கள் தாம், எனவே, உங்களது கோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்' என்ற குர்ஆன் வசனத்தையும் மேற்கோள் காட்டியிருந்ததோடு, நாட்டின் சட்டப்படி தேர்தல் காலங்களில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்திரிந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தீர்கள்.
இஸ்லாம் வலியுறுத்துகின்ற சகோதரத்துவமும், சமூக ஒருமைப்பாடும் என்பது தேர்தல் காலங்களையும் உள்ளடக்கிய வகையில் எல்லாக் காலங்களுக்கும் அவசியப்படுகின்ற ஒன்றே என்பதனையும், எக்காலத்திலும் அசைக்க முடியாத சகோதரத்துவத்தினையும் சமூக ஒற்றுமையினையுமே இஸ்லாம் போதிக்கிறது என்பதனையும் நீங்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள் என்பது எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையின் தேர்தல் சட்டமானது தாம் விரும்பிய குழுக்களாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கிறதே தவிர மாற்றுக்குழுக்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், அபாண்டங்களையும், வன்முறைகளையும், அதே போன்று மக்களை ஏமாற்றும் பொய்ப் பிரச்சாரங்களையும் அனுமதிக்கவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு விடயங்களையும் நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் எங்களுக்கு எதிரான, அநீதியான, சட்டவிரோதமான, வன்முறையான நடவடிக்கைகளிலும், மக்களை ஏமாற்றுகின்ற தந்திரமான செயற்பாடுகளிலும் இறங்கியிருக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றோம்மேலும், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஒற்றுமை அவசியம் எனவும் தெரிவித்திருந்தீர்கள். இதனை நீங்கள் சொல்லித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இல்லையென்பதனையும், ஏற்கனவே சமூகம் இந்த விடயங்களில் ஒற்றுமைப்பட்ட வகையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு விசுவாசமான குரல்களாக இருக்க வேண்டிய உங்களைப் போன்றவர்கள் இக்கட்டான சூழ்நிலைகளிலாவது அவவ் hறு குரல் கொடுக்கவில்லை என்பதுதான் நமது சமூகத்தின் மத்தியில் பெரும் விசனத்தையும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் உண்டாக்கியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை மாத்திரம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வேளை முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் ஒற்றுமைப்பட்டு 'அதனைக் கண்டிக்க வேண்டும். அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும' என்ற நிலைப்பாட்டில் இருந்த வேளை நீங்கள் குறித்த சம்பவத்திற்குப் பொறுப்பான பௌத்த தேரரைத் தனியாகச் சென்று சந்தித்து 'பள்ளிவாயலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. ஒரு தகரத்திற்குக் கூட சேதம் ஏற்படவில்லை. ஊடகங்களில் சொலல் ப்படுவது அத்தனையும் பொய்ப்பிரச்சாரம்.' என்று சொன்னதை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது முழு முஸ்லிம் சமூகமுமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துப் பேச வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதியினால் எப்படி முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து துரோகம் இழைக்கும் வகையில் நடந்து கொள்ள முடிந்தது? என அனைத்து முஸ்லிம்களும் வருந்திக கவலைப்பட்டார்கள்.எனவே, காத்தான்குடியில் PMGG யுடன் பகிரங்கக் கலந்துரையாடல் நடத்துவதானது முழு முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கே பாதகமாக அமையும் என்ற தொனியில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்தானது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகவே அமைகிறது.
எனவே, பதவி சொகுசுகளுக்காகவும், அரச சுகபோகங்களுக்காகவும் சமூகத்தின் நலன்களைத் தாரைவார்த்து பொய்களையும் அபாண்டங்களையும் கூறி முஸ்லிம் சகோதரர்களை (பொலிஸ் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் அலைக்கழியச் செய்து) இழிவுபடுத்தி, பொதுச்சொத்துக்களைக் கபளீகரம் செய்கின்ற அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் காரணமாகவே நமது சமூகத்தின் ஒற்றுமையும் அரசியல் பலமும் சிதைக்கப்பட்டிருக்கிறதே தவிர, நம் சமூகத்தின் மத்தியில் நடை பெறும் நாகரீகமான பகிரங்கக் கலந்துரையாடல்கள் மூலமாக சமூகம் பிளவுபடவில்லை என்பதில் இனிமேலாவது நீங்கள் தெளிவு பெற வேண்டும்.
இறுதியாக, எம்முடனான நாகரீகமான பகிரங்கக் கலந்துரையாடல் ஒன்றுக்கு நீங்கள் தயாராக இல்லாத நிலையில் உங்களிடம் மேலும் மேலும் இதுபற்றி கட்டாயப்படுதத் நாம் விரும்பவில்லை. இவ்வாறானதொரு பகிரங்க கலந்துரையாடல் உங்களின் பக்கத்தில் சாத்தியமில்லாமல் போனால் நாம் அதற்கான மாற்று வழிகளைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்தவகையில் நம் சமூகத்தின் பொதுநன்மை கருதி நீங்கள் விரும்புவது போன்று மக்கள் முன்னிலையில் அல்லாத ஒரு கலந்துரையாடலுக்கும் நாம் சம்மதிக்கிறோம். மக்களின் நன்மை கருதி நடாத்தப்படும் அவ்வாறான சந்திப்புக்கள் எவராலும் திரிபு படுத்தப்படாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டியிருக்கிறது. அதற்றேறஏறப் டுகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மை கொண்ட நெறிப்படுத்தப்பட்ட கலந்துரையாடலாகவே அது கண்டிப்பாக அமைய வேண்டும்.
எனவே, தங்களுடன் பகிரங்கமான அல்லது பிரத்தியேகமான கலநதுரையாடல் ஒன்றுக்கு நீங்கள் சம்மதிக்கின்ற பட்சத்தில் அதற்கான திகதியொன்றினை எமக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். அல்லாஹ் உண்மையாளர்களுக்கு தன் அன்பைச் சொரிந்து மேலும் மேலும் அவனது நேர்வழியில்
பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
காத்தான்குடி.
0 comments :
Post a Comment