பந்தாய் அடிபடும் முதலமைச்சர்! விக்னேஸ்வரனுக்கு த.தே.கூ உததரவு!
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது எனவும் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன் போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கத் துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
8 comments :
முதலில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது,
எங்கள் கௌரவ முதலைச்சர் ஒரு அரசியல்வாதியல்ல, அவர் அதை விரும்பவும் இல்லை. அவர் ஈழத் தமிழர் மத்தியில் மிஞ்சியிருக்கும் ஒரு படித்த, பண்பான, நேர்மையான, நீதியான, பொதுநலம் கொண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர்.
அவரை தெரிவு செய்தது தமிழ் மக்களே தவிர அவராக அப்பதவிக்கு வரவில்லை.
அவரில் மக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
அதற்கு மாறாக, முற்பது வருட காலாமாக ஒரு அறிவு கெட்ட, சுயநலவாத, ஒரு கொடூர சர்வாதிகாரனின் தனி மனித முடிவுகளுக்கு வாயை மூடிக்கொண்டு தலை அசைத்த கூட்டமும் , அவனின் தூரநோக்கற்ற ஒவ்வொரு முட்டாள் செயல்பாடுகளையும் போற்றி, தலையில் தூக்கி வைத்த கூட்டமும், அவனுடன் சேர்ந்து அழிவுகளுக்கு துணை போன கூட்டமும், கொடி பிடித்த கூட்டமும், இவ்வளவு கால அழிவுகளையும், அவலங்களையும் கசப்பான அனுபவங்களையும் கண்டும்,கேட்டும், பார்த்தும்,
இன்றுவரை அதை உணர்ந்து, சிந்தித்து திருந்தவில்லை என்று தான் தெரிகிறது.
சாதாரண மனிதர்களா?
நல்லதை செய்யாவிடினும் தீமையை செய்யாதே.!!!
ஆக்கபூர்வமான, யதார்த்த பூர்வமான அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லாசிகளை வழங்கி, ஆதரவளிக்காவிடினும், தயவு செய்து தடைகளை போட்டு, குழப்பாமல் பொறுமையாக இருப்பதே இன்றைய தேவை. அதுவே நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் சேவை.
As a Chief Minister hold on to your diplomacy.This is the first attempt
by the TNA to makes you to disconnected from the central government.It is hard on to move with the trickery lot.However you got into the political stage,be alert about the "Clever Dicks"
எங்களைப் பொறுத்தளவில் வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு எங்கள் பங்கு பற்றி மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.
அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. மற்றைய நாடுகளுக்கு எம்மையும் தெரியாது எமது பிரச்சனையும் தெரியாது. ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும், சிந்திக்கவு ம் போவதில்லை. நாம் என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?
குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை எல்லோருக்கும் கட்டாய தேவையாகிறது. எனவே, தயவு செய்து எமது முதலமைச்சரும், இந்திய பிரதமரும் கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஆக்கபூர்வமாக செயல்பட இடமளிக்க வேண்டும்.
எமக்கு சாக்கடை அரசியல் இனியும் வேண்டாம்.
எங்களின் முடிவு சரியானது, தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்.
நன்றி
ஈழத்தமிழ் மக்கள் சமுதாயம்
எங்களைப் பொறுத்தளவில் 98% வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு நாமும் பங்கு பற்றி மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.
அதைவிட்டு ஒளிந்து, ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அதனால் மற்றைய நாடுகளுக்கு எம்மையும் தெரிய வராது எமது பிரச்சனையும் தெரிய வராது. ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும் மாட்டார்கள், எங்களை பற்றி சிந்திக்கவு ம் போவதில்லை.
அவர்களுக்கு என்ன அக்கறை எங்களை பற்றி? நாம் என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?
இங்கே தான், குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை எல்லோருக்கும் கட்டாய தேவையாகிறது.
எனவே, தயவு செய்து எமது முதலமைச்சரும், இந்திய பிரதமரும் கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஆக்கபூர்வமாக செயல்பட இடமளிக்க வேண்டும்.
இனிமேலும் எமக்கு சாக்கடை அரசியல் வேண்டாம். போதும் தலையிடி.
எங்களின் முடிவு சரியானது, தயவு செய்து எங்களை சுதந்திரமாக இயங்க விடுங்கள்.
நன்றி
ஈழத்தமிழ் மக்கள் சமுதாயம்
They try make you isolated and trying to make you as a circus animal to dance accordingly to the same old tune.You are in the midst of cunning foxes.They use low cunnig for what they wanted.Tricking and deceiving are peanut matters for these crazy guys.
Do not follow the south Indian style rotten politics.
Mr.CV was allowed to take oath before our Hon.President MR,some TNA VIPs were in the the lot watching the oath taking ceremony and they were having a friendly chat with the singhalese VIPs too,but for the Int Commonwealth Conferrence,they do reject him not to take part in it.It is surprising.What do we learn from these tricky ideas.Afterall it is a
game to please the south Indians as well as the local people how we are devoted to our society.Also it could be a major attempt to black out the popularity of our CM
இதுகள் எல்லாமே பர நாய் கூட்டங்கள், எதற்கு கடிபாடு, முரண்பாடு என்று எவரும் ஆராய்வதில் பிரயோசனமில்லை. இதுகளின் செயல்பாட்டால் தான் புலிகள் இதுகளை பங்கர் வெட்டவும், எல்லை காவலுக்கும் பாவித்தார்கள். இதுகளுக்கு அடக்குமுறை தான் சிறந்த மருந்து. அதை பாவித்தால் மட்டுமே குணப்படுத்தலாம்.
எமது மதிபிற்குரிய கௌரவ முதல் அமைச்சரே, நீங்கள் தெரிவு செய்யும் வழியில் நாம் வருவோம். எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே.
எல்லோரும் தமிழ், தமிழர் என்றதிக்காக, சாக்கடை அரசியல் வாதிகளினதும், சுயநல வாதிகளினதும், தமிழ் துரோகிகளிதும், கிரிமினல்களிதும், நம்பிக்கை துரோகிகளுக்கும் நாம் ஒருபோதும் வோட்டு போட மாட்டோம் என்று உறுதி பூண்டுள்ளோம்.
இம்முறை தேர்தலில் எங்களை ஏமாற்றி விட்டார்கள்.
நாம் இவர்களை தெரிவு செய்ததில் தவறு செய்து விட்டோம் என்று இப்போ உணர்கின்றோம்.
இவர்களை விட அரசாங்ககட்சி கார்ரர்கள் அல்லது சிங்கள் அரசியல் வாதிகள் எவ்வளவோ மேல் என்ற உண்மையையும் உணர்கின்றோம்.
Post a Comment