மாற்று முறையொன்றை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி
ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிட்சை பரீட்சையின் புள்ளி வழங்கல் முறை தொடர்பில் மாற்று வழியொன்றை பயன் படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். பாணந்துறை சுமங்கல மகளிர் வித்தி யாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கையை உயர்த்துமாறு நான் இன்று கூறினேன். வந்திருந்த மாணவர்களில் 6 பேர் கைகளை உயர்த்தினார்கள். கையை உயர்த்தா மாணவர்களிடம் நீங்கள் சித்தி யடையவில்லையா என வினவினேன். அவர்கள் சித்தியடையவில்லை என கூறினார்கள்.
எத்தனை புள்ளிகள் எடுத்தீர்கள் என கேட்டபோது, 136 புள்ளி என தெரிவித்தனர். 136 புள்ளிகளை எடுத்த மாணவர் ஏன் சித்தியடையவில்லை? ஏனெனில் இங்கு 160, 153 என வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எமது ஊரில் 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்தாலும் இங்கு அந்த புள்ளி இருந்தும் பயனில்லை. அவ்வாறு எனின் அந்த மாணவர் சித்தியடையவில்லை என கூற முடியாது. எனவே இந்த புள்ளி வழங்கும் முறை தொடர்பில் மாற்று முறையொன்றை பயன்படுத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
0 comments :
Post a Comment