Saturday, October 19, 2013

மழைக் காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனேக இடங்களில் நண்பகல் அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கடும் மழை பெய்யுமெனவும் மழை வீழ்ச்சியின் அளவு சுமார் 100 மில்லி மீற்றர் வரை அதிகரிக்க முடியுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி கூறினார்.

மழையின்போது காற்று கடுமையாக வீசும் அதேநேரம் மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலியிலிருந்து மாத்தறையூடாக பொத்துவில் வரையில் கடல் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும் எனவும் கடலில் வீசக்கூடிய காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் எனவே கடலுக்குச் செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment