ஹலாலுக்கு எதிராக விரோதம் தெரிவித்து மத ஒற்றுமை இயக்கம் போர்க்கொடி!
சில அடிப்படைவாத அமைப்புக்கள் ஹலால் எதிர்ப்பு எனக்கூறிக் கொண்டு நடாத்திவந்த திட்டங்கள் காரணமாக மேற்குல மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான ஏற்று மதி வர்த்தகம் சரிந்துள்ளதாகவும், இலங்கையிலுள்ள பௌத்த மதகுருமார் அந்நாடுகளுக்குச் செல்வதற்காக விசா பெற்றுக் கொள்வதற்குக் கடினமாக உள்ளதாகவும் தேசிய ஒற்றுமைக்கான மேற்படி சர்வ மத ஒன்றியம் குறிப்பிடுகின்றது.
நாட்டின் ஏனைய மதங்களையும் இனங்களையும் அவர்கள்தம் கலாச்சார உரிமைகளையும் இழிந்துரைத்து, செயற்படுகின்ற அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் தங்களது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாக தர்ம ரஷ்மி அமைப்பின் தலைவர் குலகம தம்மரங்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத ஒன்றியத்தினால் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தேரர் கருத்துரைக்கும்போது, குறிப்பிட்டதாவது: மதங்கள் தொடர்பில் விதவிதமான எதிர்ப்புக்களை வெளிக்காட்டுவதன் தீய செயற்பாட்டின் மூலம் பிறநாடுகளில் இலங்கையர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகவும், இலங்கையர் பல்வேறு கோத்திரங்களை உடையவர்கள் என்ற பார்வை அவர்கள்மீது படுவதாகவும் குறிப்பிட்டார். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை இல்லாமற் செய்யும் இவ்வாறான அடிப்படைவாதிகள் தொடர்பில் கவலைப்படுவதாகவும் தம்மரங்சி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கம்புறுகமுவே வஜிர தேரர் இதுதொடர்பில் கருத்துரைக்கும்போது:
பல்வேறு அமைப்புக்களை அமைத்துக்கொண்டு, ஏதேனும் ஒரு மதத்திற்கோ கலாச்சாரத்திற்கோ அச்சுறுத்தல்கள் விடுவதை நாங்கள் ஒருபோதும் அநுமதிக்க மாட்டோம். நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வ மத ஒற்றுமை அமைப்பின் மூலம் இதனைப் பெரிதும் எதிர்க்கிறோம். எங்களது அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாட்டு தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகும். அதன்பொருட்டு அனைத்து மத உறுப்பினர்களும் எங்கள் எங்களோடு கரமிணைத்திருக்கின்றார்கள்’ என்று குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment