ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்புரிமையை நாம் ஏற்கமாட்டோம் - சவுதி
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைஉறுப்பினராக தெரிவுசெய் யப்பட்ட சவுதி அரேபியா அதை ஏற்க மறுத்து விட்டது இந்த நிராகரிப்பை சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளதுடன் அறிக்கை ஒன்றை யும் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது சிரியா விவகாரம் உள்பட பல பிரச்சினைகளில் ஐ.நா. இரட்டை வேடம் போடுகின்றது எனவும் சிரியாவில் தனது நாட்டு மக்களையே கொன்று குவித்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை தோல்வி அடைந்து விட்டது எனவும் இரசாயன ஆயுதங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான யுத்தம் மற்றும் மத்தியகிழக்கில் ஆயுத குவியலையும் தடுக்காமல் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டி யுள்ளது. சவுதி அரேபியா சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு, ஆதரவு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment