முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணுடன் சேர்ந்து வர்த்தகரிடம் கோடி ரூபா கப்பம் பெறமுயன்ற பொலிஸ் அதிகாரி கைது!
பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகரிடமிருந்து கோடி ரூபா கப்பம் பெறுவதற்கு முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர், கான்ஸ் டபிள் மற்றும் ஒரு யுவதி ஆகிய மூவரையும் எதிர்வரும் முதலாம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு மேலதிக நீதவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான யுவதி குறித்த வர்த்தகரின் கள்ள மனைவி என்றும், அவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றிருந்தபோது உபபொலிஸ் பரிசோதகருடன் நட்பாக பழகி பின்னர் இருவரும் இணைந்து வர்த்தகரிடம் அவ்வப்போது கப்பம் பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பம் பெறுகின்ற போதெல்லாம் பொலிஸ் கான்ஸ்டபிள், உபபொலிஸ் பரிசோத கருக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தகரின் கள்ள மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறியே இவ்வாறு கப்பம் பெற்றுக்கொள்ளப் பட்டதாகவும் கப்பமாக கேட்கப்படும் தொகையை கொடுக்கவிட்டால் இந்தக் கள்ள தொடர்பு தொடர்பில் மனைவியிடம் தெரிவித்துவிடுவதாக வர்த்தகரை அச்சுறுத் தியே கப்பம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் முதலில் 35 இலட்சத்தை பெற்றுக்கொண்டதாகவும் அதற்கு பின்னர் 70 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியபோதே அதுதொடர்பில் வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கைது செய்ததாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment