த.தே.கூ அரசாங்கத்துடன் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றும் செய்யமுடியாது! த.தே.கூ விற்கு ஒரே ஒரு வழி உள்ளது!
உலகில் உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடை யில் கூடியே தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளன எனவும், த.தே.கூ அரசாங்கத்துடன் தனித்துப் பேச்சுவா ர்த்தை நடத்துவதில் அர்த்தமேயில்லை எனவும், அனை த்துக் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடி இணக்கப் பாட்டுக்கு வருவதன் ஊடாகவே சாத்தியமான தீர்வை எட்டலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரா ளுமன்றத் தெரிவுக்குழுவில கலந்துகொள்வதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமாகும் என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவி த்தார்.
அத்துடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பெருத்தமான இடம் பாராளு மன்றத் தெரிவுக்குழுவே என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்க மாட்டோம் என கூட்டமைப்பு தெரிவித்துள் ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
திஸ்ஸ விதாரண இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒன்றிணைந்து வேலை செய்து பல்வேறு பிரச்சினை களுக்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது எனவும், எனவே இரண்டு தரப்பினரும் இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வரவேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பாக வட மாகாண அரசு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலம் வட மாகாணத்தை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வ தற்கு உதவியாக அமையும். உண்மையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டுமாயின் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளவேண்டுமே தவிர அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதில் அர்த்தம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment