மாணவர்கள் ஒன்பது பேரைக் கெடுத்த அதிபர் கம்பி எண்ணுகிறார்...!
ரக்குவானை, கெந்தபொல பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் மாணவர்கள் ஒன்பது பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியது தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இன்று பகல்வேளை ரக்குவானைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த தகவலை குறித்த அதிகார சபை பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்தே சந்தேகநபரான அதிபர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
சந்தேகநபரான அதிபர் பெல்மடுல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார்.
(கேஎப்)
1 comments :
எப்படியெல்லாம் தலையங்கம் எழுதும் இலங்கை நெட்டுக்கு " கம்பியடித்தவர் கம்பி எண்ணுகிறார்...! " என்று எழுத தெரியலையா ???????????
Post a Comment