Tuesday, October 22, 2013

மனநோயாளிகளுக்கு இலவச பசும்பால்! - சுகாதார அமைச்சு நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு பசும்பால் இலவசமாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் விரைவில் பரீட் சார்த்தமாக ஒரு சில அரச வைத்தியசாலைகளில் ஆரம்பிக் கப்பட்டு பின்னர் நாட்டிலுள்ளஅனைத்து வைத்தியசாலை களுக்கும் விஸ்தரிக்கப்படுமென இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுகாதார அமைச்சுடன் மேற்கொண்டுள்ள தாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக குறித்த சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அச்சங்கத்தின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.

நாட்டிலுள்ள நவீன சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பால்மா பொதிகளில் பாதுகாப்புமிக்கவையென அச்சிடப்பட்டிருந்தாலும் இவைகளில் சில சர்ச்சைக்குரிய வையாக காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை பால் உற்பத்தியாளர் சங்கத்துடன் நோயாளிகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment