வெளிநாட்டுப் பிரஜை கடலில் மூழ்கிப் பலி !
ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கொக்கல பகுதி ஹோட்டல் ஒன்றின் அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளி நாட்டுப் பிரஜைகள் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை கண்ட உயிர்பாதுகாப்பு பிரிவினர் அவர்களை காப்பாற்றி முதலுதவி வழங்கியுள்ளனர். அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சடலம் கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment