சுற்றுலாத்துறைக்காக பெண்களை அரசு விற்பனை செய்யாது – கரலியத்த
இலங்கையில் பாலியல் தொழிலை ஒரு போதும் சட்ட ரீதியாக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது இதே சமையம் சுற்றுலாத்துறை மேம்பாடு அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவும் இலங்கையில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட மாட்டாது என மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாத்துறை வளர்சிக்காக இலங்கை பெண்களை விற்பனை செய்யாது என அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் எந்தவொரு காரணத்திற்காகவும் வர்த்தக ரீதியான பாலியல் தொழிலுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது நாட்டில் சுமார் 40,000 பெண்கள் வர்த்தக ரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதை ஞாபகப்படுத்திய அமைச்சர் எனவே நாடு தழுவிய ரீதியில் பெண்களுக்கு சமூக நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் கருக்கலைப்பு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு போன்றன தொடர்பிலும் மக்களுக்க விளக்கம் அளிக்கப்படவுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment