இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் அவசரக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய் யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடற்றொழில் அமை ச்சர் ராஜித சேனாரத்னவிற்கு பணிப்புரையினை விடுத்து ள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமக்கு கீழ் வரும் அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதியின் முன்னால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபின்னரே ஜனாதிபதி இந்த உத்தரவை அமைச்சர் ராஜிதவிற்கு பணித் துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தி்ல நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனையும் ஜனாதிபதி கேட்டுள்ளார் என செய்திகள் தெரிவிப்பதுடன் இந்தக்கூட்டத்துக்கான திகதி ஏதும் குறிக்கப்படவில்லை எனதெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இந்தச்சந்திப்பில் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடலோரக் கிராமங்களின் கிராம அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவர் என அரச பகுதி தகவல்கள் தெரிவிக் கின்றன.
No comments:
Post a Comment