Tuesday, October 22, 2013

மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை: மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ்

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டுமென அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் இந்தத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியிருந் தனர்.

இந்தத்தீர்மானம் சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டதற்கு தமது கட்சி ஆதரளிக்காது என கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் ஆனால் இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் ஏதும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது இந்தத்தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேச சபையின் சுயாதீன தீர்மானகவே கருத வேண்டுமென தெரிவித்ததுடன் தற்போது அவைகளை விட்டுவிட்டு முதலில் வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகளான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம் போன்ற காரணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

1 comment:

  1. மண்டையன் குழுவினராலும் மாவீரர் ஆக்கப் பட்டவர்கள் உள்ளனர் அல்லவா...

    ReplyDelete