வட மாகாண சபையின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது..!
வட மாகாண சபையின் கூட்டம் யாழ்ப்பாணம் கைத்தடிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மாகாண சபை கேட்போர் கூடம் உள்ளிட்ட கட்டடம் நேற்று (22) வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விகனேஷ்வரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாண சபைக்கான உறுப்பினர்கள் சென்ற செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன், மாகாண சபையின் கூட்டத்தை நடாத்துவதற்காக இடம் ஒன்று இல்லாமையினால் ஆரம்ப கூட்டத்தை நடாத்த முடியாமல் போயுள்ளது.
வட மாகாண சபை பிரதான செயலாளர் அலுவலகம், எதிர்வரும் 25 ஆம் திகதி வட மாகாண சபையின் முதலாவது கூட்டத்தை நடாத்துவதற்கு ஆயத்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment