Thursday, October 10, 2013

உலகின் மிகப் பெரிய அமைச்சரவையாக இலங்கை அமைச்சரவையை தெரிவுசெய்தது கின்னஸ் சாதனை புத்தகம்!

உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றது மட்டுமல்லாது இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்ததை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் பல புதிய பிரதியமைச்சர்கள் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

1 comments :

Arya ,  October 10, 2013 at 10:24 PM  

மகிந்த அவர்களும் பிரபாகரன் மாதிரி தாளம் போடும் கூட்டங்களை தன்னுடன் சேர்த்து வைத்திருந்தால் கடைசியில் அழிவு தான் மிஞ்சும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com