அட்டமஸ்கட பிக்குவுக்கு பயந்து அடக்கி வாசித்த வவுனியா ரெலிகொம்
நேற்றைய தினம்(25) நாடு பூராகவும் சிறிலங்கா ரெலிகொம் திணைக்களத்தால் 'நாளை இல்லை இன்றே அனைத்து சிறுவர்களையும் பாதுகாப்பவற்கு உறுதி பூணுவோம்' என்னும் தொனிப் பொருளில் சிறுவர் துஸ் பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டது. நாடு பூராகவும் விழிபுணர்வு நடவடிக்கை சிறப் பாக மேற்கொள்ளப்பட்ட போதும் வவுனியாவில் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு மணியில் இருந்து ஜந்து மணி வரை ஒரு பொழுது போக்கு நடவடிக்கை யாகவே வவுனியாவில் மேற்கொள்ப்பட்டுள்ளது என மக்கள் கருதுகின்றனர்.
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் விகாராதிபதி கல்யாணதேரரால் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்தமை தொடர்பில் செய்திகள் வெளியாகி இருந்தன. இருப்பினும் ஆதாரங்கள் இருந்தும் விகாராதிபதி அரசியல் செல்வாக்கு காரணமாக இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் ரெலிகொம் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வை விகாராதிபதிக்கு எதிரான விழிப்புணர்வாக கருதப்பட்டு விடும் என்பதற்காக ரெலிகொம் இதனை அடக்கி வாசித்துள்ளதாக தெரியவருகிறது.
கண் முன்னே துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ள நிலையில் அதனை தடுக்க அல்லது குற்றவாளியை தண்டனைக்கு உட்படுத்த வக்கில்லாதவர்களே சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். இந்த ரெலிகொம் உண்மையில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்காக தான் நேற்றை தினம் விழிப்புனர்வு செய்துள்ளார்கள் எனில், குற்றவாளியை கைது செய்யுமாறு கோரியிருக்கலாம் ஆனால் துஸ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாத்துக் கொண்டு நோட்டீஸ் கொடுப்பதால் என்ன பயன் நோட்டீஸ் போய் தடுக்காது எனவும் மக்கள் தெரிவத்துள்ளனர்.
0 comments :
Post a Comment