Saturday, October 12, 2013

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்

கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்கதுடன் குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.

வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது என்பதுடன் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது மடடுமல்லாது சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

மேலும் சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளதுடன் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

சீத்தாப்பழத்தை உண்ணடால் மலச்சிக்கல் நீங்கும் சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும் இதன் இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர பேன்கள் ஒழிந்து விடும்.

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப் பழ விதைபொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகுவதுடன் பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறுவதுடன் முடியும் உதிராது பொடுகு காணாமல் போகும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படுத்தப்படுவதுடன் காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com