அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் வருபவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவர்- அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் இலங்கை அகதிகளை உடனடியாக நாடுகடத்தப்படும் கொள்களை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரமாக கடைபிடிக்கிறது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்அடிப்படையில், கடந்த வாரம் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 79 பேரில் 73 பேர் உடனடியாக நாடுகடத்தப்பட்டதுடன், எஞ்சிய 6 பேரும் எதிர்வரும் நாட்களில் நாடுகடத்தப்படவுள்ளனர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அபாயகரமான பயணத்தின் ஊடாக, இலங்கையில் இருந்து யாரும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்க வேண்டாம் என்று அவுஸ்திரேலியா அரசாங்கம் கோரியுள்ளது.
0 comments :
Post a Comment