Saturday, October 26, 2013

சி.பி.ஐ. விசாரணைக்குத் நான் தயார்- மன்மோகன் சிங்! பிரதமர் என்று சொல்லும்படி அவர் செயல்பட்டதில்லை - பா.ஜ.க

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு சிக்கலில் சிக்கியுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தான் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் நான் சட்டத்துக்கு அப்பாற் பட்டவன் அல்ல எனவும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. அல்லது வேறு யாராவது என்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் பதிலளிக்க நான் தயார் எனவும் என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமரிடம் சி.பி.ஐ. அமைப்பின் ஓர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும் அள வுக்கு அந்த அமைப்புக்கு அதிகாரம் தரப்பட வேண்டுமா? என்று கேட்கின்றார்கள் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. பல்வேறு ஊழல் விவகாரங்களில் விசாரணையை உச்ச நீதி மன்றம் நேரடியாகக் கண்காணிப்பதால் அது அரசின் முடிவெடுக்கும் நடை முறையை பாதிக்கிறதா என்று கேட்கியர்கள். உச்ச நீதிமன்றத்தில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்துப் பேச நான் விரும்பவில்லை.

நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் என்ன செய்யும் அல்லது செய்யாது என்பது குறித்து நான் கருத்துக் கூறப் போவதில்லை. சி.பி.ஐ. வழக்குகளும் முறை கேடுகளும் எனது ஆட்சிக்காலத்தின் மீது நிழல் போல் படியுமா என்பது குறித்து வரலாறுதான் மதிப்பிட வேண்டும். நான் எனது கடமையைத் தொடர்ந்து செய்வேன். எனது பதவிக்காலம் என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள்தான் மதிப்பிட வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

இதேவேளை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லாவுக்கும் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக்கிற்கும் எதிராக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது தொடர்பில் சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க தயார் என்று கூறிய பிரதமரின் பேச்சு அர்த்தமற்றது என பா.ஜ.க. விமர்சித்துள்ளதுடன் பா. ஜ. க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, விசாரணைக்காக பிரதமரை சி. பி. ஐ. அணுகினால், அவரால் எப்படி அந்த வகையான விசாரணையை புறக்கணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன் ஆஜராகும்படி பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் தாம் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்போது என்ன நடந்தது என்பது எல்லோரும் அறிந்ததே என்று குறிப்பிட்டார். மேலும் பிரதமர் என்றும் அவர் சொல்கிறபடி செயல்பட்டதில்லை என்றும் கூறினார். நாட்டு மக்களை குழப்பவே அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தாங்கள் ஒத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் தேவைப்பட்டால் பிரதமரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா வலியுறுத் தியுள்ளார். முன்னதாக தாம் சட்டத்திற்கு மேலானவர் இல்லையென்றும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com