Thursday, October 17, 2013

மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு!!

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டதுடன் பல்வேறு சர்வதேச கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளதுடன் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார்.

இது மட்டுமல்லாது இங்கிலாந்து ராணி எலிசபத்தும் மலாலாவை சந்திக்க அழைப்பு அனுப்பியுள்ளார் அது மட்டுமல்லாது மலாலாவுக்கு கவுரவ குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என தெரிகிறது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரவுல் வேலன் பெர்க், நெல்சன் மண்டேலா, தலாய் லபாமா, ஆங்சான் சூகி, நிசாரி இஸ்மாயிவ் மதகுரு அகா கான் ஆகியோருக்கு அடுத்தபடியாக கனடா நாட்டின் கவுரவ குடியுரிமையை பெறும் ஆறாம் நபர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment