Monday, October 21, 2013

சந்திரிகாவுடன் தொடர்பா! ஐயோ ஆபத்து !!.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்காவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கும் அமைச்சர்களின் பட்டியல் ஒன்றை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவிடம் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிய வருகின்றது.

தற்போதும் தனக்கு செல்வாக்குள்ள சில அமைச்சர்கள் மற்றும் தனது விசுவாசிகளுடன் முன்னாள் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்துள்ளதாக அறிய வந்ததன் பின்னரே இந்த பிந்திய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிய முடிகிறது.

இத்தகய நடவடிக்கைகளை அவதானித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது உள்ளக கிளர்ச்சிகளை அடக்குவதற்கும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுபவர்களை முறியடிப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் தமது எம்பிமார்களுக்கான புதிய ஒழுக்கக் கோவையைத் தயாரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் அமைச்சர்மார்கள் மற்றும் எம்பிமார் நடாத்திய தொலைபேசி உரையாடல் நாடாக்கள் மற்றும் ஆவணங்கள் முதலியவற்றை வெளிக்கொணர விருப்பதடன் தவறிழைத்த அமைச்சர்மார்கள் மற்றும் எம்பிக்களின் குற்றச்சான்றுகளை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது

No comments:

Post a Comment