ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே ஜேம்ஸ் பெக்கரை விரட்டிவிட்டு, கஸினோவை மூடுவதற்கு ஆவன செய்வோம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகிறது.
தற்போது வரி செலுத்தி நடாத்திச் செல்கின்ற டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தையில் கட்டப்படுகின்ற கஸினோ நிலையங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்க, நாட்டின் சீரிய கலாச்சாரத்தை அழித்தொழிக்க அரசாங்கம் ஆவன செய்து கொண்டிருக்கின்றது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிடுகிறார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துரைத்த உப தலைவர், வரி செலுத்தி நாட்டில் குறித்ததொரு விடயத்தை நடாத்திச் செல்வதனால் அது சட்டரீதியாகாது என்றும் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
No comments:
Post a Comment