Saturday, October 12, 2013

போதைப் பொருள் வர்த்தகத்தில் எம்.பிமார் ஈடுபட்டுள்ளனராம் – ஒப்புதல் கொடுக்கின்றார் முன்னாள் பிரதமரின் மகன்!

போதைப் பொருள் வர்த்தகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது உண்மை என்று அரசாங்க கட்சியைச் சேர்ந்தவரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயக்காவின் மகனுமான விதுர விக்கிரம நாயக்கா, தெரிவித்துள்ளார்

இங்கிரியா, காமினி மத்திய மகா வித்தியாலயத்தில் மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் மக்களுக்கு மதுவைக் கொடுப்பதால் அவர்கள் விருப்பு வாக்குகளை அளிக்காமல் விடுகின் றார்கள். இங்கிரியா பகுதிகளில் போதைப் பைத்தியம் வேகமாகப் பரவி வருகின்றது. வெகுவிரைவில் இளந்தலைமுறையினர் கெட்டழிந்து விடுவார்கள் என்று கவலை தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  October 12, 2013 at 7:17 AM  

He is right.
The MR government Ministers and some MPs are in the international Mafia network. they bring drugs and smokes to the our country.
Police should control them

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com