இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் பின்தள்ளி இலங்கை முன்னேறியது!
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு அமைப்பின் ((Food Policy Research Institute)மூலம் வறியவர்கள் வாழ்கின்ற நாடகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இலங்கை 43 ஆம் இடத்தை பெற்றுள்ளது தெற்காசிய நாடுகளான இந்தியா (63), பாகிஸ்தான் (57) பங்களாதேஷ் (58) இடத்தில் உள்ளது. இவ்வாய்வில் 120 நாடுகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அவ்வவ் நாடுகளுக்குள் வாழ்கின்றவர்களின் மந்த போசனையில் வாடுவோர் எண்ணிக்கை, ஐந்து வயதுக்குக் குறைவானோரின் மரணங்களின் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்திற் கொண்டே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மக்கள் வறுமையில் வாடுகின்ற பிரதேசமாக அவர்கள் தெளிவுறுத்தியுள்ள போதும், உலகில் மிகவும் வறியவர்கள் வாழ்கின்ற வலயமாக ஆபிரிக்காவிலுள்ள சஹாரா வலயமே அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
இந்த ஆய்வானது முதன் முதலில் 1990 ஆண்டு கணிப்பிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை பசியால் வாடுகின்ற மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 34மூ ஆல் குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment