விபச்சாரத் தொழிலையும் போதைப்பொருட்களையும் சட்டரீதியாக்க தீர்மானித்துள்ளார்கள்!
அரசாங்கம் கஸினோவை சட்டரீதி யாக்கி, விபச்சாரத் தொழில், போதைப் பொருட்களை நாட்டினுள்ளே சட்டரீதி யாக்குவதற்கு ஆவன செய்துவருகின்றது எனவும், அச் செயற்பாடுகள் நடைமுறைக்குவரும்போது இலங்கையர் 'அநிச்சா வத சங்காரா' என்று நினைவு மீளெழ பூசை செய்ய வேண்டிவரும் எனவும் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் தினியாவல பாலித்த தேரர் தெளிவுறு த்துகிறார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது:
தற்போதைய அரசு சட்ட ரீதியற்ற எந்தவொரு விடயத்தைச் செய்தாலும் பொதுமக்கள் கண்டும் காணாதவர்கள் போல் காதைப் பொத்தி கண்ணைப் பொத்தி செவிடர்கள் போலும் குருடர்கள் போலும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு நாடு அழிவுப் பாதையை நோக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதற்கெதிராக செயற்பட வேண்டிய முக்கிய உறுப்பினர்கள், அவ்வாறு செயற்படாதிருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டினுள்ளே ஏதேனும் தீய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, அதைப் பற்றி வாய்திறக்காமலிருப்பதற்காக அனைத்துச் சலுகைகளையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து அவர்களை பேசாமடந்தைகளாக்கி விடுகின்றது அரசாங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment