பலஸ்தீன தலைவர் யசீர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டமை உறுதி!
பலஸ்தீன தலைவர் யசர் அரபாத் அணிந்திருந்த ஆடை யில், பொலோனியம் எனப்படும் விஷம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நிபுணர்கள் இதை உறுதிசெய்துள்ளனர். பலஸ்தீன விடுதலைக்காக 40 வருடங்கள் போராடிய யசர் அரபாத் கடந்த 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பெரிசில் உயிரிழந்தார்.
நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக பெரிஸ் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதே அரபாத்தின் உயிர் பிரிந்தது. எனினும் அவரது உயிரிழப்பு தொடர்பில் பல தரப்புகளிலிருந்தும் சந்தேகம் வெளியிடப்பட்டது.
கோமா நிலையில் அரபாத் இருந்ததால், பிரேதப் பரிசோதனை ஏதும் செய்யப் படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அரபாத் இறக்கும்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய அவரது உடலில் மிகக்கொடிய விஷமான பொலோனியம் இருந்ததாக சுவிட்சர்லாந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது அறிக்கை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து யசர் அரபாத்தின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, கதிர்வீச்சு துறைசார் நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சில எழும்புகளையும் ,துணி இழைகளையும் ஆய்வாளர்களய் சேகரித்திருந்தனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமும், அரபாத் உயிருடன் இருந்தபோது அணிந்திருந்த ஆடைகளின் பரிசோதனைகள் மூலமும் அவர் மீது பொலோனியம் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இஸ்ரேல் உளவுப்பிரிவினரே அரபாத்தை பொலோனியம் விஷம் தடவி கொலை செய்திருக்கலாமென சந்தேகம வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment