கட்டுநாயக்க கடுகதி வீதியின் அழகினை கண்டுகளிக்க மக்களுக்கு சந்தர்ப்பம்
கட்டுநாயக்க கடுகதி வீதியின் அழகினை கண்டுகளிக்க மக்களுக்கு இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மக்களுக்கு சுதந்திரமாக கடுகதி வீதியை பார்வையிட முடியும்.
கடுகதி வீதி வரலாற்றில் மற்றுமொரு தடையை தாண்டி கொழும்பு கட்டுநாயக்க கடுகதி வீதி எதிர்வரும் 27ம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கிணைவாக மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வியாழக்கிழமை வரை கடுகதி வீதி முழுமையாக திறக்கப்பட்டிருக்கும் இன்று காலை 6 மணியளவில் பேலியகொட பிரNjச வீதியிலிருந்து ஆரம்பமான மரதன் ஓட்ட போட்டியை தொடர்ந்து மக்கள் பார்வைக்காக கடுகதி வீதி திறக்கப்பட்டது.
மரதன் போட்டி கட்டுநாயக்க நுழைவு வீதியில் 24 கிலோ மீட்டர் பயணத்தை தொடர்ந்து நிறைவடைந்தது. இதற்கு மேலதிகமாக ஏனைய நுழைவு வாயில்களிலிருந்தும் மரதன் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. கட்டுநாயக்க கொழும்பு கடுகதி வீதி காலை 7 மணி தொடக்கம் இரவு 12 மணி வரை மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கும் எந்தவொரு வாகனமும் உட்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழல் மாசடைய கூடிய பொருட்களை வீதியில் வீச வேண்டாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுள்ளது.
கடுகதி வீதியின் பிரதான நுழைவாயில் பேலியகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மஹரஅப்புகேவத்த> வெடிகந்த> கட்டுநாயக்க ஆகியன ஏனைய பிரவேச வீதிகளாகும். கட்டுநாயக்க கடுகதி வீதி மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள 3 நாட்களிலும் கலை கலச்சார நிகழ்வுகளை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை துவிச்சக்கர போட்டி காலை பேலியகொடயிலிருந்து ஆரம்பமாகியது. தொரண சந்தியில் இன்று இரவு இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளதுடன் பிரபல பாடகர்கள் இசை கச்சேரியில் பங்கேற்னவுள்ளனர்.
0 comments :
Post a Comment