வவுனியா தனியார் பஸ்சங்கம் தொடர்ச்சியாக புளொட்டின் ஆளுகைக்குள்
வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தனியார் பஸ் சங்கமானது உருவாக்கப்பட்டது. அப்போது வவுனியாவில் செல்வாக்குடன் விளங்கிய முன்னாள் அரச துணை ஆயுதங்குழுவான புளொட் அமைப்பினரால் அது உருவாக்கப்பட்டதுடன் அதன் தலைவராகவும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் உறவினரான கே.இராஜேஸ்வரன் அவர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருட பொதுக் கூட்டத்திலும் அவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டு வருகிறார். நேற்றைய தினம் இடம்பெற்ற 15 ஆவது பொதுக் கூட்டத்திலும் அவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 15 வருடங்களாக புளொட் அமைப்பின் செல்வாக்கின் கீழேயே வவுனியா தனியார் பஸ் சங்கம் இயங்கி வருகிறது. ஏனைய தனியார் பஸ் சங்கங்களுக்கு முன்மாதிரியாக இது செயற்படுவதாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தனியார் பஸ்சங்க தலைவர் இராஜேஸ்வரன் வவுனியா நகரசபை உறுப்பினராகவும் புளொட் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment