ரணிலுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம்! பதற்றநிலை காரணமாக இருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
மாத்தறை நகரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை எற்பட் டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலக்கு மாறு கோரி இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இந்நிலையில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலைமை தாங்கினர். இதேவேளை மாத்தறை, வெல்லமடின் பிரதேசத்தில் அரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.
மாத்தறை நகரப்பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கு மிடையில் மோதல்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கற்களும் வீசப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment