Thursday, October 17, 2013

ஏறாவூரில் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் !

ஏறாவூர் மீராகேணி சிறுவர் பாராமரிப்பு இல்லத்திற்கு தேசிய ஓருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு 50.000 ரூபா பெறுமதி வாய்ந்த தளபாட வசதிகள் மற்றும் உணவு தட்டு வசதிகள் என்பன இன ஒற்றுமைக்கும் சமாதானத்திற் குமான அமைப்பினால் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஏறாவூர் மீராகேணி சிறுவர் பாராமரிப்பு இல்லத்தின் முகாமையாளர் உரையாற்றும் போது:

இங்கு தாய் தந்தையை இழந்த பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்கள் கற்றல், ஆடை களஞ்சியப்படுத்தல், உணவு ஏற்பாட்டு வசதிகள் போன்ற சிக்கல்களை எதிர் கொண்டார்கள். எமக்கு இக்குறைகளை இன ஒற்றுமைக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு நிறைவு செய்து தந்துள்ளது. ஆகவே, மாணவர்கள் சார்பாகவும் முகாமையாளர் என்ற ரீதியிலும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

இதன் தலைவர் ஆர்.எம். அர்ஸாத் உரையாற்றும் போது:

தேசிய ஓருமைப்பாட்டு வாரத்தை நடாத்துவதற்கு அநுனுசரணை வழங்கிய தேசிய மொழிகள் மற்றும் சமூக ஓருமைப்பாட்டு அமைச்சு, தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், ஏறாவூரில் சிங்கள பாட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அனைத்து மாணவர்களுக்குமான இறுதிப் பரீட்சை 2013-10-26 ம் திகதி அன்று நடைபெறுவதுடன். இம் மாணவர்களுக்கான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்தால் வழங்கி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட தேசிய ஓருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ஏ.சந்திரகுமார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.ஆ.சஜீர், ஆலோசகர் றிழா, இல்ல மாணவர்கள், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment