மாநாட்டில் கலந்துகொள்ளாத விடத்து இந்தியா ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும் - பிரசாத்
இந்திய பிரதமர் மன் மேகன் சிங் அந்த நாட்டின் தலைவராக மாத்திரம் அல்லாது, பிராந்திய தலைவராகவும், பொதுநல வாய தலைவர்களில் ஒருவராகவும், உலகத் தலைவர் களில் ஒருவராகவும் இருப்பதை கருத்திற்கொண்டு, தீர் மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், இலங் கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர் கள் மாநாட்டில் இம்முறை இந்தியா கலந்துகொள்ளாத விடத்து, அந்த நாடு ஏனைய நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்ததாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்
மேலும் இம்முறை அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சகல நாடுகளும் ஏகோபித்த தீர்மானம் மேற்கொண்டிருப்பதால், எவ்விதமான புறக்கணிப்பும் இல்லையென காரியவசம் தெரிவித்துள்ளதுடன், உலகின் சகல நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், அவற்றை மறுசீரமைப்பதற்காக ஒத்துழைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கான இலங்கையின் அழைப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் கடந்த வாரமளவில் கூறியிருந்த துடன், இந்த மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த ஒரு பிரதிநிதியும் அனுப்பகூடாது என்று தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரசாத் காரியவசம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த மாநாட்டில் பிரதமர் கலந்துக் கொள்வாரா? இல்லையா? என்பது தொடர்பில், இந்திய மத்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, தமிழக அரசாங்கம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு கனடாவைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment