Friday, October 18, 2013

இலங்கை வெற்றி பெற வேண்டும். சகல இனங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கனடிய அமைச்சர் கென்னி.

எங்களுக்கு இலங்கை ஒரு முக்கியமான நாடு. அந்த நாடு வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று சமீபத்தில் உள்ளூர் ஊடாகவியலாளர் சந்திப்பில் பேசிய கனடாவின் சிரேஷ்ட மத்திய அமைச்சர் ஜேசன் கென்னி குறிப்பிட்டுள்ளார். கனடாவில் உள்ள இலங்கை புலம்பெயர் மக்கள் மத்தியில் மீளுருவாக்கம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பெருந் தொகையான இலங்கை புகலிடக் கார்களின் தாய் நாடு இலங்கையாகும். எனவே கனடா அரசாங்கத்தின் வெளியுறவு நிகழ்ச்சி நிரலில் இலங்கைகு உச்ச முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கென்னி.

ஆனால், அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டு பரப்புரைக்கு ஒரு தக்கையாகப் பயன்படுத்தப்படுவதற்கு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தயாரில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன் பல ஆண்டுகள் போரினால் அழிக்கப்பட்ட இலங்கையின் பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு சகல இனத்துவ பின்புலங்களும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கென்னி வலியுறுத்தினார்.

4 comments :

Anonymous ,  October 18, 2013 at 6:36 AM  

Thank you for the marvellous advise

Anonymous ,  October 18, 2013 at 11:16 AM  

We hope and pray that Srilankan Government would do it's best to conduct the commowealth countries conferrence in November.We have the guts and we have the talents to finish it successfully.We could only feel pity for those who ignore our
flamboyant performances.

Anonymous ,  October 18, 2013 at 4:55 PM  

harper cry for tamil votes. do you know fox

Anonymous ,  October 18, 2013 at 8:22 PM  

If best harpers play the instruments
it may be interesting,but fox never listen to the music which comes out from the harp,perhaps wily old fox may listen

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com