பையன்கள் பற்றாக் குறையால் பன்சலைகள் மூடப்படுகின்றன – அஸ்கிரிய மகாநாயக்கர்!
குடும்பங்களில் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கையை விட பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாக பௌத்த கோயில்கள் மூடப்பட்டு வருகின்றன. இவ்வாறு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம சிறி புத்தரகித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத் திட்டமிடலும் இவ்வாறு பௌத்த கோயில்கள் மூடப்பட்டு வருவதற்கு ஒரு காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சித் அலுலிகார வண. தேர்ரிடம் ஆசி பெறச் சென்ற போதே அவர் இவ்வாறு கவலைப்பட்டுள்ளார். வசதி உள்ளவர்களும் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தினரும் தமது பிள்ளைகளை 'சனன' வுக்கு' திருநிலைப் படுத்துவதில் கவனம் லுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment