இலங்கையில் தமிழர்களுக்கு ஆபத்துக்கள் இல்லை: பிரித்தானிய
இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் தொர்பில் பிரித் தானிய அரசாங்கம் விடுத்துள்ள புதிய வகையீட்டு அறிக் கையில் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது எந்த விதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கவில்லை என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மார்க் ஹார்பர் தெரி வித்துள்ளார்.
மேலும் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் தனிப்பட்ட அடிப்படையில் கவனத்தில் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட தற்போதைய நிலமையில் இலங்கைத் தமிழர்கள் எந்தவிதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதனைவிட இந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் 347 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான அடிப்படையிலும் சுய விருப்பின் அடிப்படையிலும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இவ்வாறு நாடுகடத்தப்படுகவர்கள் அனைவரும் உள்துறை அமைச்சும், நீதிமன்றமும் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்துவது பொருத்தமானது எனக் கருதினால் மட்டுமே நாடு கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment